/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்றில் கோரை புற்கள்: தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
கூவம் ஆற்றில் கோரை புற்கள்: தண்ணீர் செல்வதில் சிக்கல்
கூவம் ஆற்றில் கோரை புற்கள்: தண்ணீர் செல்வதில் சிக்கல்
கூவம் ஆற்றில் கோரை புற்கள்: தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : டிச 18, 2025 06:41 AM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் பகுதியில் கூவம் ஆற்றில் கோரை புற்கள் வளர்ந்து, காடு போல மாறியுள்ளதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணையில் இருந்து உருவாகும் கூவம் ஆறு பேரம்பாக்கம், கடம்பத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல், திருவேற்காடு வழியே, 72 கி.மீ., பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.
கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை, அதிகத்துார், புட்லுார், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணை பகுதிகளில் வெள்ளநீர் கடல்போல் தேங்கியுள்ளது.
இதில், புதுச்சத்திரம் பகுதியில் கூவம் ஆற்றில் கோரைப்புற்கள் அதிகளவில் வளர்ந்து, காடு போல மாறியுள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள தடுப்பணையில் ஷட்டர் பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, கூவம் ஆற்றில் வளர்ந்துள்ள கோரை புற்களை அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

