நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில், இம்மாதம், 21ம் தேதி, போலீசார் வாகன சோதனையின் போது, காரில் கடத்தப்பட்ட, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கஞ்சா கடத்திய, அம்பத்துார் ஜஸ்டின் செல்வகுமார், 30, உசிலம்பட்டி சவுந்தரபாண்டியன், 45, விழுப்புரம் முத்துமாயன், 47, ஆகிய மூவரை கைது செய்தனர். இந்நிலையில், அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன் கவுடா, 48, என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

