/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்
/
வீட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்
ADDED : ஏப் 24, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, மாநெல்லுார் கிராமத்தில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பாதிரிவேடு போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
மாநெல்லுார் கிராமத்தைச் சேர்ந்த மாதவன், 23, என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 1.50 கிலோ கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், தலைமறைவாக உள்ள மாதவனை தேடி வருகின்றனர்.

