/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை தடுப்பில் மோதி தீ பற்றி நாசமான கார்
/
சாலை தடுப்பில் மோதி தீ பற்றி நாசமான கார்
ADDED : மே 18, 2025 03:27 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், 40; தனியார் ஊழியர். இவர், தனது 'மாருதி ஸ்விப்ட்' காரில், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாப்பான்சத்திரம் பகுதியில் திரும்பினார்.
அப்போது, அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி, கார் மீது உரசி சென்றது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழுந்து, சாலை தடுப்பு மீது மோதி சேதம் அடைந்தது.
அப்பகுதியில் இருந்தவர்கள், காயமடைந்த பிரசாத்தை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரியத் துவங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து நாசமானது. நசரத்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.