/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மலைப்பாதையில் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து: 7 பேர் உயிர் தப்பினர்

ADDED : அக் 13, 2024 01:34 AM

திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 36. இவர் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் டாடா சுமோ காரில், தனது மனைவி, மகன், மகள், உறவினர்கள் என மொத்தம், 7 பேருடன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தனர். காரை ராஜா ஓட்டி வந்தார்.
மலைக்கோவிலில் பொதுவழியில் சென்று மூலவரை தரிசித்துவிட்டு, மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு செல்வதற்காக காரில் மலையில் இருந்து புறப்பட்டார்.
மலைப்பாதையில் பாதி துாரம் வந்தவுடன் காரின் பிரேக் பிடிக்காமல் போனதால், ராஜா சாலையோரம் உள்ள மின் விளக்கு கம்பத்தின் மீது மோதினார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பேரீகார்டு மீது மோதிய பின், மலைப்பாதையின் தடுப்பு சுவரில் மோதி கார் நின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட ஏழு பேரும் லோசான சீராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.