ADDED : பிப் 22, 2024 10:59 PM
கடம்பத்துார், சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40. கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் விடையூர் ஊராட்சிக்குட்பட்ட காரணி கிராமத்தில் உள்ள தன் சகோதரர் வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன் வந்து தங்கியுள்ளார். குடிபோதைக்கு அடிமையான இவர் வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அவரது உறவினர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து உறவினர்கள் உடலை சுடுகாட்டிற்கு தகனம் செய்ய கொண்டு சென்றனர்.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் போலீசார் வந்து உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து மர்மமான முறையில் கார் ஓட்டுனர் இறந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.