/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் தொழில்நெறி கருத்தரங்கம்
/
திருத்தணி அரசு கல்லுாரியில் தொழில்நெறி கருத்தரங்கம்
திருத்தணி அரசு கல்லுாரியில் தொழில்நெறி கருத்தரங்கம்
திருத்தணி அரசு கல்லுாரியில் தொழில்நெறி கருத்தரங்கம்
ADDED : ஜன 31, 2025 02:06 AM

திருத்தணி:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆகியவற்றின் சார்பில், மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்,  நடந்தது.
கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் விஜயா வரவேற்றார்.
இதில், திருவள்ளூர் மாவட்ட பயிற்சி கலெக்டர் ஆயுஷ்குப்தா பங்கேற்று, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து, கல்லுாரி மாணவ- - மாணவியர் இடையே, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பயிற்சி கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள் பாலாஜி, ஹேமநாதன், திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில், வேலை வாய்ப்பு மைய இளநிலை உதவியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

