ADDED : மார் 02, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
சேத்துப்பட்டு: எம்.சி.சி., மெட்ரிக் பள்ளி மற்றும் தமிழ்நாடு கேரம் சங்கம் இணைந்து, 'மினி கேரம் கார்னிவேல்' என்ற தலைப்பில், கேரம் விளையாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை சேத்துப்பட்டில் நடத்தின.
போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜான் சுந்தர் பங்கேற்று, கேரம் விளையாட்டை கற்றால் கவனம் கூடும், ஒழுக்கம், மனவலிமையை உயர்த்தும் என, ஊக்கமளித்தார்.
உலக தரவரிசையில் இடம் பிடித்த ஆசிய கேரம் வீரர் ஆரோக்கிராஜ் பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு நேரடியாக விளையாட்டின் நுணுக்கங்களை விளக்கினார்.
