/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
/
மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 17, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் உழவர் சந்தை எதிரில், நேற்று முன்தினம், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐ.என்.டி.யூ.சி., மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில், 39 பேர் ஜே.என்.சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
இந்நிலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட, 40 பேர் மீதும் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.