/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மல்லிகை தோட்டத்திற்கு தீ வைத்தவர் மீது வழக்கு
/
மல்லிகை தோட்டத்திற்கு தீ வைத்தவர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2024 10:14 PM
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜபேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு உரிய நிலத்தில் கோழிப்பண்ணை மற்றும் மல்லிகை தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவரது உறவினர் குமார், 30, என்பவர், கோழிப்பண்ணை மற்றும் மல்லிகை தோட்டம் சேதம் அடையும் விதமாக, தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, குமார் தாக்கியதில் சங்கர் படுகாயம் அடைந்தார். நேற்று மீண்டும் சங்கர் வீட்டிற்கு, அதே கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், விஜய் ஆகியோருடன் வந்த குமார், இரும்பு கம்பியால் சங்கரை மீண்டும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் படி பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

