/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு
/
பனைமரங்களை வெட்டி சாய்த்தவர் மீது வழக்கு
ADDED : அக் 16, 2024 07:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சி பூஞ்சோலை நகர் பகுதியில் ஓடைக்கு செல்லும் சாலை உள்ளது.
இங்கு , சாலையோரத்தில் இருந்த 80 ஆண்டுகள் பழமையான, 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது.
இதுகுறித்து பகுதிவாசிகள் சின்னம்மாபேட்டை வி.ஏ.ஓ., இளங்கோவிடம் புகார் அளித்தனர். விசாரணையில் மரங்களை வெட்டியது அதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் 48 என்பது தெரியவந்தது.
இதையடுத்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆறுமுகத்தின் மீது வி.ஏ.ஓ., புகார் அளித்தார். வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.