/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு
/
'டிட்டோ ஜாக்' சாலை மறியல் 145 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 19, 2025 11:09 PM
திருவள்ளூர்:அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 'டிட்டோ ஜாக்' நிர்வாகிகள் உள்ளிட்ட, 145 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகே, தமிழக அரசை கண்டித்து, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, 'டிட்டோ ஜாக்' சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதியளிக்காத நிலையில், மாவட்ட துணை தலைவர் ராஜா மற்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர் உள்ளிட்ட, 145 பேர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் டவுன் போலீசார், போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்தனர். பின், அனைவரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.