/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி ஆசிரியரை தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு
/
பள்ளி ஆசிரியரை தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு
ADDED : மார் 16, 2025 09:33 PM
மப்பேடு:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ், 26. இவர். மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள சென்மேரீஸ் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி பள்ளியில் பணிபுரியும் கீழச்சேரியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரிடம் பேசி கொண்டு வந்துள்ளார்.
இதை பார்த்த பூவனுாரைச் சேர்ந்த சதீஷ், 24, என்பவர், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ராகேஷை வழிமறித்து, 'நீ பேசும் ஆசிரியை என் முன்னாள் காதலி. நீ அவரிடம் பேசக்கூடாது' எனக் கூறி கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராகேஷ் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் உட்பட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.