தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

 த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

 த.வெ.க., நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 03, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:வேட்பாளரை மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய த.வெ.க., வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருத்தணி தொகுதியில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் சத்யகுமாரை மாற்றக் கோரி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருகே, த.வெ.க.,வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருத்தணி நகர த.வெ.க., தலைவர் அகிலன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். த.வெ.க., வேட்பாளர் சத்யகுமார் கட்சி நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், சத்யகுமாரை மாற்றி விட்டு, திருத்தணியை சேர்ந்த முகவர்களை வேட்பாளராக நியமிக்க த.வெ.க., தொண்டர்கள் வலியுறுத்தினர். பின் அங்கு வந்த த.வெ.க., மாவட்ட செயலர் டில்லி பாபு கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தி அழைத்து சென்றார். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அனுமதியின்றி ஆர்பாட்டம் த.வெ.க., கட்சி நிர்வாகிகள் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

★★

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us