/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மைசூரு சிவன் கோவிலுக்கு பிரமாண்ட சிலை வடிப்பு
/
மைசூரு சிவன் கோவிலுக்கு பிரமாண்ட சிலை வடிப்பு
ADDED : அக் 14, 2024 06:09 AM

மாமல்லபுரம் : கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள கோவிலுக்காக, மாமல்லபுரத்தில் பிரமாண்ட சிவபெருமான் கற்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் கற்சிற்பக்கூடங்கள் நிறைந்துள்ளன. இங்கு, ஹிந்து கடவுள்களின் சிலைகளே பிரதானமாக வடிக்கப்படுகின்றன.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் உருவாகும் புதிய கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படும் கற்சிலைகள், பெரும்பாலும் இங்குள்ள கூடங்களில் வடிக்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலம், மைசூரு பகுதியில் உருவாக்கப்பட உள்ள சிவபெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்ய, இங்குள்ள தனியார் சிற்பக் கூடத்தில், சிவபெருமான் நின்ற கோலத்தில் பிரமாண்ட கற்சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிற்பக் கலைஞர் பூபதி கூறியதாவது:
இச்சிலை செதுக்குவதற்காக, ஆந்திர மாநிலத்திலிருந்து ஓராண்டிற்கு முன், கருங்கல் கொண்டு வந்து, பணியை துவக்கினோம். 20 அடி உயர சிலை வடித்துள்ளோம். சிலையின் எடை 30 டன் வரை இருக்கும். மைசூரு அருகே, இதை பிரதிஷ்டை செய்த பிறகே, கோவில் உருவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.