/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் ஓய்வெடுக்கும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்… திக்…' பயணம்

ADDED : நவ 26, 2025 04:59 AM

திருமணிக்குப்பம்: திருமணிக்குப்பம் பகுதியில் சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருமணிக்குப்பம் ஊராட்சி. இங்கிருந்து அகரம் வழியாக வயலுார் மற்றும் வடமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.
இதனால், வாகனங்களில் செல்வோர் சிரமப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.