/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை நெடுஞ்சாலை மீடியனில் சுற்றித் திரியும் கால்நடைகள்
/
திருமழிசை நெடுஞ்சாலை மீடியனில் சுற்றித் திரியும் கால்நடைகள்
திருமழிசை நெடுஞ்சாலை மீடியனில் சுற்றித் திரியும் கால்நடைகள்
திருமழிசை நெடுஞ்சாலை மீடியனில் சுற்றித் திரியும் கால்நடைகள்
ADDED : ஜன 17, 2025 01:31 AM

திருமழிசை:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை. இந்த நெடுஞ்சாலை வழியே, 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதிவாசிகள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் கால்நடைகள், மேய்ச்சலுக்கு சென்று, நெடுஞ்சாலை மீடியன் பகுதியில் இளைப்பாறுகின்றன. இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சில நேரங்களில் மீடியன் பகுதியில் இளைப்பாறும் கால்நடைகள் திடீரென சாலையில் ஒடும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், நெடுஞ்சாலை மற்றும் மீடியன் பகுதியில் இளைப்பாறும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.