ADDED : ஜன 23, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, ஜன. 23--
கும்மிடிப்பூண்டி அடுத்த, குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக்குப்பம் கிராமம். அங்குள்ள ராமர் கோவில் தெருவை, சிமென்ட் கல் சாலையாக மாற்ற, ஒன்றிய நிர்வாகம் சார்பில், 7.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
அந்த சாலையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்பட்டதோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. அந்த சாலை, 6 மீட்டர் அகலம் உள்ள நிலையில், தற்போது திட்டமிடப்பட்டுள்ள, மூன்றரை மீட்டர் சாலைக்கு பதிலாக, ஐந்து மீட்டர் அகல சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.
மேலும், தாமதிக்காமல் மக்களின் எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்ற கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

