/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலை அமைப்பு
/
ராஜபத்மாபுரத்தில் சிமென்ட் சாலை அமைப்பு
ADDED : நவ 15, 2024 01:42 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்கு ஒத்தவாடை தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மண் சாலையாக உள்ளதால் மழைக்காலத்தில் சேரும் சதியுமாக காட்சியளிக்கும் இதனால் மக்கள் வெளியில் சென்று வர முடியாமல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர்.
எனவே தங்கள் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என கடந்தாண்டு ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஒன்றிய பொது நிதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் 135 மீட்டர் நீளத்தில் 11 அடி அகலத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பின் தங்கள் தெரு சாலை அமைக்கப்படுவதால் அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.