தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பிற்படுத்த மாணவர்களுக்கு மத்திய கல்வி உதவித்தொகை

பிற்படுத்த மாணவர்களுக்கு மத்திய கல்வி உதவித்தொகை

பிற்படுத்த மாணவர்களுக்கு மத்திய கல்வி உதவித்தொகை


ADDED : செப் 09, 2026 01:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 01:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: ‘பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்’ என, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின மாணவ – மாணவியருக்கு, பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு, 2026 – -27ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, 100 சதவீத தேர்ச்சி பெற்ற, சிறந்த செயல்பாடு கல்வி நிறுவன பள்ளிகளில், நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ – மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை, https://scholarships.gov.in என்ற இணையதளத்தில், வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில், கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணமாக, ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்பது மற்றும் -10ம் வகுப்பு பயில்வோருக்கு 75 ஆயிரம் ரூபாய், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ – மாணவியருக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

மாணவியருக்கு, இத்திட்டத்தில் 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அக்., 15ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us