ADDED : பிப் 12, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
சோழவரம்: கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பெண் பக்தரிடம், 4 சவரன் செயினை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி, 60. இவர், நேற்று அதே கிராமத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்திற்கு சென்றார். கோவில் ராஜகோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றும்போது, சக பக்தர்களுடன் சுமதியும் மேல்நோக்கி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, சுமதியின் கழுத்தில் இருந்த, 4 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்தான், செயின் திருடு போனது தெரிந்தது. சோழவரம் காவல் நிலையத்தில் சுமதி அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
