தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பராமரிப்பு இன்றி சேதமடையும் சோதனைச்சாவடி கட்டடங்கள்

பராமரிப்பு இன்றி சேதமடையும் சோதனைச்சாவடி கட்டடங்கள்

பராமரிப்பு இன்றி சேதமடையும் சோதனைச்சாவடி கட்டடங்கள்


ADDED : செப் 12, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் மாநில எல்லையோர சோதனைச்சாவடி கட்டடங்களை உடனே சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை -– கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், 2018 ஜூன் மாதம், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது. இங்கு, போக்குவரத்து துறை, வனத்துறை, போலீசார், வாகன தணிக்கை மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுப்பணி துறையின் பராமரிப்பில் சோதனைச்சாவடி கட்டடங்கள் உள்ளன. திறந்தது முதல் சோதனைச்சாவடி முழுமையாக இயங்காததால், அங்குள்ள பல கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் மூடியே உள்ளன.

இதனால், கட்டடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து உள்ளிருக்கும் செங்கற்கள் தெரிகின்றன. பொதுப்பணி துறையினர் முறையாக பராமரிக்க தவறியதால், சோதனைச்சாவடி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

திறக்கப்பட்டு எட்டு ஆண்டுகளே ஆன நிலையில், முறையான பராமரிப்பின்றி கட்டடங்கள் சேதமடைந்து இருப்பது, வாகன ஓட்டிகளிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், கட்டடம் இடிந்து விழும் அபாயம் ஏற்படும்.

எனவே, பொதுப்பணி துறையினர் துரிதமாக செயல்பட்டு, சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us