/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ சுரங்கம் பணி ஏப்ரலில் முடியும்
/
சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ சுரங்கம் பணி ஏப்ரலில் முடியும்
சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ சுரங்கம் பணி ஏப்ரலில் முடியும்
சேத்துப்பட்டு - ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ சுரங்கம் பணி ஏப்ரலில் முடியும்
ADDED : பிப் 16, 2024 10:07 PM
சென்னை:மாதவரம் - - சிறுசேரி சிப்காட் புதிய மெட்ரோ ரயில் தடத்தில், சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணிகள், வரும் ஏப்ரலில் முடிக்கப்பட உள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், மாதவரத்தில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கி.மீ., வழித்தடத்தில், மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலையில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து துவங்கி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 2.8 கி.மீ., சுரங்கப்பாதை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு செப்., மாதம் துவங்கி முழு வீச்சில் நடக்கிறது.
தற்போது 130 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை நோக்கி அமைக்கப்படும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில், 'சிறுவாணி' என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, 205 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது, சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும்.
சேத்துப்பட்டில் இருந்து ஸ்டெர்லிங் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகளை, வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த தடத்தில், சேத்துப்பட்டு ஏரி வழியாக கீழ்ப்பாக்கம் நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.