/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் கோப்பை போட்டி நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் கோப்பை போட்டி நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டி நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் கோப்பை போட்டி நாளை வரை அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 18, 2025 11:44 PM
திருவள்ளூர், மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க, நாளை வரை முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் கோப்பை - 2025 விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு, கடந்த ஜூலை 14ம் தேதி முதல் https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை, 57,107 போட்டியாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவிற்கான கடைசி நாள், 16ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.
இதை தொடர்ந்து, மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கால அவகாசம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தகவல் தொடர்பு மையத்தை 95140 00777 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.