ADDED : ஜூலை 19, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை, அண்ணாமலை நகரைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகள் ஆராதனா, 2. நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது, விஷ பூச்சி ஒன்று குழந்தையின் பாதத்தை கடித்தது.
ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.