/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுமுறை நாட்களை வீணாக்காமல் பசுமையை உருவாக்கும் சிறுவர்கள்
/
விடுமுறை நாட்களை வீணாக்காமல் பசுமையை உருவாக்கும் சிறுவர்கள்
விடுமுறை நாட்களை வீணாக்காமல் பசுமையை உருவாக்கும் சிறுவர்கள்
விடுமுறை நாட்களை வீணாக்காமல் பசுமையை உருவாக்கும் சிறுவர்கள்
ADDED : ஜன 12, 2026 04:52 AM

பொன்னேரி: விடுமுறை நாட்களை வீணாக்காமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், ஏரி, குளம் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமையை உருவாக்கி வருகின்றனர்.
பொன்னேரி பகுதியில், நேதாஜி மரவங்கி அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், வார விடுமுறை நாட்களில் ஏரி, குளங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த அமைப்பு, கடந்த 2015ல் இருந்து, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகளை வைப்பதுடன், அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்தும் வருகிறது. பொன்னேரி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், இதுவரை 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வைத்துள்ளது.
மொபைல்போனில் 'ரீல்ஸ்' பார்ப்பது மற்றும் எடுப்பது என, இளைய சமுதாயம் இருக்கும் சூழலில், விடுமுறை நாட்களை வீணாக்காமல், மரக்கன்றுகளை வளர்க்கும் இந்த அமைப்பினரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் ஸ்ரீதர்பாபு கூறியதாவது:
எதிர்கால சந்ததியருக்கு ஆரோக்கியமான சூழலை விட்டு செல்வது, நம் ஒவ்வொருவரின் கடமை. தொடர்ந்து, 560 வாரங்களாக மரக்கன்றுகளை வைக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளோம்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு செல்லும்போது துணிப்பையை எடுத்து செல்ல வேண்டும். அனைவரும் மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

