பராமரிப்பின்றி சீரழிந்த அறிவியல் பூங்கா குப்பை கழிவுகளால் குழந்தைகள் அவதி
பராமரிப்பின்றி சீரழிந்த அறிவியல் பூங்கா குப்பை கழிவுகளால் குழந்தைகள் அவதி
UPDATED : நவ 23, 2026 04:10 PM
ADDED : நவ 23, 2026 04:10 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில், குப்பை கழிவுகள் குவிந்துள்ளதால், அப்பகுதி மக்கள், குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சாலை விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூங்கா, ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
அங்கு, போக்குவரத்து விழிப்புணர்வு, சாலையில் வாகனங்கள் பயன்படுத்தும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
கடந்த ஆண்டு திறக்கப்பட்ட இந்த அறிவியல் பூங்காவிற்கு, தினமும் குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள், குழந்தைகளுடன் விளையாட விட்டு, பெரியவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பூங்காவை பொதுப்பணி துறையினர் முறையாக பராமரிக்காததால், பூங்காவிற்குள் அத்துமீறி நுழையும் மாடுகள், அங்கு வளர்ந்துள்ள புற்களை சின்னாபின்னமாக்குகின்றன.
மேலும், பூங்காவிற்கு வருவோர் விட்டுச் செல்லும் குடிநீர் பாட்டில், பிளாஸ்டிக் கவர்களை, பூங்கா ஊழியர்கள் முறையாக அகற்றாததால், பூங்கா முழுதும் குப்பை கழிவுகள் சூழ்ந்துள்ளன.
எனவே, பூங்காவில் நிரந்தர பராமரிப்பாளரை பணியமர்த்தி, மாடுகள் வருவதை தடுக்கவும், குப்பை கழிவுகளை தினமும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கம் என, கலெக்டர் கவிதாவுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
