ADDED : ஜூலை 25, 2025 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் ஸ்ரீபெரும்புதுார் நோக்கி தடம் எண் 538 ஏ என்ற மாநகர பேருந்தில் 22 வயதான மருத்துவ கல்லுாரி மாணவி சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே பேருந்து சென்றபோது, பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் பேருந்தில் கல்லுாரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவி கூச்சலிட்டதால் சக பயணியர் அவரை சரமாரியாகதாக்கினர்
திருவள்ளூர் நகர போலீசார் வந்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த மதி, 40 என்பதும் அரக்கோணத்தில் தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.
மதியை போலீசார் கைது செய்தனர்.