/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சித்ரா பவுர்ணமி விழா பால்குட ஊர்வலம்
/
சித்ரா பவுர்ணமி விழா பால்குட ஊர்வலம்
ADDED : மே 12, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை மாரியம்மன் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், திரளான பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று, பாதயாத்திரையாக கிராம தேவதை செல்லியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.