/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பி வழியும் சிட்ரபாக்கம் அணைக்கட்டு
/
நிரம்பி வழியும் சிட்ரபாக்கம் அணைக்கட்டு
ADDED : டிச 01, 2025 04:02 AM

ஊத்துக்கோட்டை: சிட்ரபாக்கம் அணைக்கட்டு நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் ஆந்திராவின் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி, உபரி நீர் சுருட்டப்பள்ளி அணைக்கட்டு வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையில் உள்ள சிட்ரபாக்கம் அணைக்கட்டை வந்தடைகிறது.
தொடர் மழையால் மேற்கண்ட அணைக்கட்டு முழுதும் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது.வழக்கமாக, இந்த அணைக்கட்டில் உள்ளூர் மக்கள் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.
இதனால், உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, 'நிரம்பி வழியும் சிட்ரபாக்கம் அணைக்கட்டில் குளிப்பது, துணி துவைப்பது, நீரில் நடந்து செல்வதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

