/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்
/
கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றவர்கள் மோதல்
ADDED : ஏப் 02, 2025 10:19 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாரத், 24, சரவணன், 22, திருநாவுக்கரசு, 27, இளங்கோ, 25. இவர்கள் நேற்று, சமத்துவபுரம் அருகே உள்ள கல் குவாரி குட்டையில் குளிக்க சென்றனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த விவேக், 25, தாஸ், 27, சுந்தரேசன், 22, புகழேந்தி, 27, ஆகியோர், பாரத் உள்ளிட்டோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்களை தாக்கி கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.
இரு தரப்பினரும், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்படி, ஆர்.கே.பேட்டை போலீசார், இரு தரப்பினரையும் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

