/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிப்காட் வளாகங்களில் துாய்மை பணி முகாம்
/
சிப்காட் வளாகங்களில் துாய்மை பணி முகாம்
ADDED : ஜன 11, 2026 06:25 AM
கும்மிடிப்பூண்டி: போகி பண்டிகையை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகங்களில், ஐந்து நாட்கள் துாய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
போகி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து சிப்காட் வளாகங்களிலும், 'சிப்காட் போகி 2026' என்ற பெயரில், ஐந்து நாள் துாய்மை பணி முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், சிப்காட் தனி துணை கலெக்டர் உமாசங்கரி, முகாமை துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் சரவணன், சிப்காட் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
சாலை மற்றும் மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு, சிப்காட் வளாகம் மற்றும் காலி மனைகளை துாய்மையாக பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை முகாமில் மேற்கொள்ள உள்ளனர்.
ஐந்து நாட்களுக்கு முகாம் நடைபெற உள்ளது. அதேபோல், தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகத்திலும் துாய்மை பணி முகாம் நேற்று துவங்கியது.

