/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியின பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு பயிற்சி
/
பழங்குடியின பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு பயிற்சி
ADDED : ஏப் 02, 2025 10:17 PM
திருவள்ளூர்:சென்னை தரமணி என்.ஐ.எப்.டி., கல்லுாரி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தேசிய உடை அலங்கார தொழில்நுட்ப கல்லுாரி இணைந்து, 'தொல்குடி தொடுவானம்' திட்டத்தில், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பயிற்சி அளிக்கிறது.
இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பயிற்சியில் பங்கேற்கும் பழங்குடியின பெண்கள் செல்லும் வாகனத்தை, கலெக்டர் பிரதாப் நேற்று காலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது:
சென்னை தரமணியில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பயிற்சியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீஞ்சூர், எல்லாபுரம் மற்றும் கடம்பத்துார் ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் பங்கேற்கின்றனர்.
இப்பயிற்சி 10 நாள் நடைபெறும். பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள், நல்ல முறையில் பயிற்சி பெற்று, வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

