தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி குழந்தைகளுடன் உரையாடல்

 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி குழந்தைகளுடன் உரையாடல்

 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி குழந்தைகளுடன் உரையாடல்


ADDED : நவ 13, 2025 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில், குழந்தைகளுடன் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கலந்துரையாடினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, 'அன்பு கரங்கள்' திட்டத்தின் கீழ், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் திட்டத்தின் கீழ், நிதி ஆதரவு பயன் பெறும் 30 பேர் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், உடல் நலம் மற்றும் மனநல மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நல குழு தலைவர் தென்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us