/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிர் மேல் உரத்திற்கு 'நானோ யூரியா' விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை
/
நெற்பயிர் மேல் உரத்திற்கு 'நானோ யூரியா' விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை
நெற்பயிர் மேல் உரத்திற்கு 'நானோ யூரியா' விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை
நெற்பயிர் மேல் உரத்திற்கு 'நானோ யூரியா' விவசாயிகளுக்கு கலெக்டர் ஆலோசனை
ADDED : நவ 09, 2025 03:15 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், நெல் பயிருக்கு யூரியாவிற்கு பதிலாக 'நானோ யூரியா' பயன்படுத்தி பயன்பெறலாம் என, கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தி ரு வள்ளூர் மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 1.17 லட்சம் ஏக்கர் நெல் பயிருக்கு, யூரியா- 5,280 மெ.டன், டி.ஏ.பி-., 470 டன், எம்.ஓ.பி., 750 டன், காம்பளக்ஸ்- 3,780 டன் தேவைப்படும்.
ஆனால், தற்போது வரை, யூரியா 3,480 மெ.டன், டி.ஏ.பி., -635 டன், எம்.ஓ.பி.,- 1,000 டன், காம்ப்ளக்ஸ் - 2,750 டன் உரம், தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், விவசாயிகளிடையே யூரியா பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, தகவல் பரவி வருகிறது. தற்போது யூரியா இருப்பு, மாவட்டம் முழுதும் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 2,020 மெ.டன் இருப்பு உள்ளது.
மேலும், வரும் வாரத்தில் 'IFFCO' யூரியா 750 டன் மற்றும் ஸ்பிக் யூரியா 250 டன், கோரமண்டல் 700 டன், நம் மாவட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கொண்டு வரப்பட உள்ளது.
சமச்சீரான உரப் பரிந்துரை படி, உரங்களை பிரித்து மேலுரமாக இடவும், புதிதாக வந்துள்ள நானோ யூரியா பயன்படுத்தி இலை வழி தெளிப்பு செய்து பயனடையலாம். எனவே, விவசாயிகள் அனைவரும் யூரியா மட்டுமே பயன்படுத்தாமல், நானோ யூரியா பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

