/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
/
வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 14, 2025 08:24 PM
திருவள்ளூர்:“வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்,” என அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், துாய்மை பணியாளர் நலவாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டத்தின் கீழ் செலவினம் மேற்கொண்ட துறை மற்றும் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு, அரசு வழங்கும் தீர் உதவித்தொகையை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும். வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில், 102 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 80.
மாவட்டத்தில் இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, தீர் உதவித் தொகையாக, 47 பேருக்கு 53.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் தீர் உதவி ஓய்வூதியம் 28 பேருக்கும், அரசு பணி 22, கல்வி கட்டண தொகை 13, பட்டா 18 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, பொன்னேரி சப் - கலெக்டர் ரவிகுமார், ஆவடி காவல் துணை ஆணையர்கள் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.