/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : பிப் 22, 2024 11:00 PM
திருவள்ளூர், பிளாஸ்டிக் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, கலெக்டர் பாராட்டி பரிசு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இணைந்து,ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு குறித்து அரசு பள்ளிகளில் ஓவியப் போட்டி கடந்த, ஜனவரியில் நடத்தப்பட்டது.
போட்டியில், திருவள்ளூர், பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்துார், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, எல்லாபுரம் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.