/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டு தாலுகாவில் 21ல் கலெக்டர் கள ஆய்வு
/
பள்ளிப்பட்டு தாலுகாவில் 21ல் கலெக்டர் கள ஆய்வு
ADDED : பிப் 17, 2024 11:16 PM
திருவள்ளூர், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், 21ல் கலெக்டர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ''உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அரசு துறையினர், ஒருநாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வு மேற்கொண்டு, அரசு திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், இம்மாதம், பள்ளிப்பட்டு வட்டம் தேர்வு செய்யப்பட்டு, வரும் 21ல் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.