தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வள பயிற்றுனர் பணியிடங்களுக்கு விணணப்பிக்க கலெக்டர் அழைப்பு

வள பயிற்றுனர் பணியிடங்களுக்கு விணணப்பிக்க கலெக்டர் அழைப்பு

வள பயிற்றுனர் பணியிடங்களுக்கு விணணப்பிக்க கலெக்டர் அழைப்பு


UPDATED : அக் 14, 2026 04:17 PM

ADDED : அக் 14, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 04:17 PM ADDED : அக் 14, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த திட்டப் பணிகளுக்கான, வள பயிற்றுனர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், ஊராட்சிகள் அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த திட்டப் பணிகளுக்காக, காலியாகவுள்ள வள பயிற்றுனர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட வள பயிற்றுநர் –1, பூண்டி, பள்ளிப்பட்டு மற்றும் வில்லிவாக்கம் வட்டார வளப் பயிற்றுநர் – 3, மாநில வள பயிற்றுநர் – 1 ஆகிய பணியிடங்களுக்கு, 30 – 45 வயதிற்கு உட்பட்ட, பட்டதாரி பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளோர், தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ, வரும் 21ம் தேதிக்குள், சுய சான்றிட்ட நகல்களுடன், ‘திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக வளாகம், திருவள்ளூர்’ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, https://tncdw.org என்ற இணையதளத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us