/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவ முகாம் கலெக்டர் உத்தரவு
/
டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவ முகாம் கலெக்டர் உத்தரவு
டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவ முகாம் கலெக்டர் உத்தரவு
டெங்கு காய்ச்சல் பாதித்த பகுதியில் மருத்துவ முகாம் கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 17, 2025 07:41 PM
திருவள்ளூர்: டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மருத்துவ முகாம் நடத்துமாறு, சுகாதார துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
கடம்பத்துார், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, வில்லிவாக்கம், ஈக்காடு மற்றும் எல்லாபுரம் வட்டாரங்களில் டெங்கு காய்ச்சல் அதிகம் பதிவாகியுள்ளது. எனவே, அனைத்து வட்டாரங்களிலும் தீவிரமான டெங்கு தடுப்பு நடடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து, 'லார்வா' கண்காணிப்பு, கொசு புகை தெளிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன், காய்ச்சல் பதிவான பகுதிகளில்சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ், பிரபாகரன், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.