/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை பணிகளில் தரமில்லை அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
/
சாலை பணிகளில் தரமில்லை அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
சாலை பணிகளில் தரமில்லை அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
சாலை பணிகளில் தரமில்லை அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்'
ADDED : ஆக 29, 2025 12:40 AM

திருத்தணி, :சாலை பணிகளில் தரமில்லை என, அதிகாரிகளை கலெக்டர் கடிந்து கொண்டார்.
திருத்தணி ஒன்றியத்தில், கன்னிகாபுரம் ஊராட்சியில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 32 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
அதே போல், மாம்பாக்கம் ஊராட்சியில் இருந்து சின்னகடம்பூர் ஊராட்சிக்கு செல்லும் தார்ச்சாலை, 94.46 லட்சம் ரூபாய் மதிப்பில், 5.56 கி.மீ.,யில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
சின்னகடம்பூர் ஊராட்சியில், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், 1.22 கோடி ரூபாய் மதிப்பில், 24 குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், மாம்பாக்கம் - சின்னகடம்பூர் சாலையை ஆய்வு செய்த கலெக்டர், 'தரமாக சாலை அமைக்கவில்லை' எனக்கூறி, ஒன்றிய அதிகாரிகளை கடிந்து கொண்டார். மேலும், 'பணிகள் நடக்கும் போது, ஒன்றிய அதிகாரிகள் கட்டாயம் இருக்க வேண்டும்' என, எச்சரித்தார்.

