/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 மாதத்தில் பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு கலெக்டர் பிரபுசங்கர் உறுதி
/
6 மாதத்தில் பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு கலெக்டர் பிரபுசங்கர் உறுதி
6 மாதத்தில் பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு கலெக்டர் பிரபுசங்கர் உறுதி
6 மாதத்தில் பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு கலெக்டர் பிரபுசங்கர் உறுதி
ADDED : செப் 19, 2024 01:49 AM

ஆவடி:திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம், நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது.
கலெக்டர் மற்றும் அதிகாரிகள் இன்று காலை 9:00 வரை, ஒரு நாள் முழுக்க ஆவடியில் தங்கி, நிறைவேற்றப்படாத பணிகள், முடிவுற்ற பணிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.
மக்களின் கருத்துகளின் அடிப்படையில், மேம்பட்ட சேவை வழங்குதல், திட்டங்கள் விரிவுபடுத்துதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாலவேடில் புதிய நுாலகம் கட்டும் பணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் பிரபு சங்கர், நேற்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னையை இணைக்கும் விதமாக, பட்டாபிராம் எல்.சி.கேட்., - 2 ரயில்வே கடவுப்பாதையில், 52.11 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறுகையில், ''பட்டாபிராம் மேம்பாலத்தில் ஒரு பகுதியை தவிர, மற்ற அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. முதற்கட்டமாக செப்., 25ம் தேதி, ஒரு வழிப்பாதையை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின், ரயில்வே கேட் மூடப்பட்டு, மீதமுள்ள பணிகள் ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும்,'' என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
வரவேற்பு
பட்டாபிராமில், கடந்த ஆறு ஆண்டுகளாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள், கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் என்ற கலெக்டர் அறிவிப்பால், அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.