/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : மார் 14, 2024 10:09 PM
திருவள்ளூர்:பள்ளி மேம்பாட்டு வளர்ச்சிக்காக விருது பெற்ற தலைமை ஆசிரியர்களை, கலெக்டர் பாராட்டினார்.
பள்ளிக்கல்வித் துறை சார்பாக, பள்ளி வளர்ச்சி மேம்பாட்டிற்காக சிறப்பாக பணியாற்றிய, தலைமையாசிரியர்களுக்கு, அண்ணா விருது மற்றும் பேராசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த, வாரம் திருச்சியில் நடந்தது.
இதில், பொதட்டூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ, கவரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் திரிபுரசுந்தரி; மணவாள நகர் அருசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், ஆகியோருக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.
புட்லுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தாஸ், கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அய்யப்பன் ஆகியோருக்கு பேராசிரியர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற அனைவரையும் கலெக்டர் பிரபுசங்கர் அழைத்து பாராட்டினார். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

