/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுதி வார்டன்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
/
விடுதி வார்டன்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 02, 2025 10:13 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி காப்பாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
அனைத்து விடுதிகளிலும் நுாலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விடுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். பெண்கள் விடுதியில் நாப்கின் இயந்திரங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
அனைத்து விடுதிகளிலும் மாணவர்கள் உணவு அருந்தும் வகையில், மேஜை மற்றும் நாற்காலி அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு உணவு பட்டியலின்படி உணவுகளை வழங்க வேண்டும். வட்டாட்சியர்கள் வாரத்திற்கு ஒரு முறை, துணை கலெக்டர்கள் மாதத்திற்கு 10 விடுதிகளும், கோட்டாட்சியர்கள் மாதத்திற்கு 5 விடுதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

