/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்த்தும் உலக புத்தக தினவிழாவில் கலெக்டர் பேச்சு

ADDED : ஏப் 25, 2025 02:16 AM

பொன்னேரி:பொன்னேரி முழுநேர கிளை நுாலகம் சார்பில், உலக புத்தக தின விழாவை ஒட்டி, நேற்று புத்தக கண்காட்சி துவக்கப்பட்டது. கலெக்டர் பிரதாப் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தார். பின், அங்கிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் போது, வாசகர் வட்ட தலைவர் ஜோதீஸ்வரன், துணை தலைவர் வெல்டன் உள்ளிட்டோர் உடனருந்தனர்.
அதன்பின் கலெக்டர் பேசியதாவது:
புத்தக கண்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான நுால்கள், சட்ட நுால்கள், இதழியல் அரசியல் அமைப்பு சட்டம் என, பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. போட்டி தேர்வுகள் சார்ந்த கூடுதல் நுால்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். புத்தக வாசிப்பால் தான், ஒரு மாணவன் தன்னை மட்டுமின்றி நாட்டையும் உயர்த்த முடியும்.
இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். புத்தக கண்காட்சிக்கு வாருங்கள். புத்தகங்களை வாசித்து பயன்பெறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், அரசு கல்லுாரி எதிரில் பொது நுாலகத்திற்கு சொந்தமான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நுாலக கட்டடம் அமைத்து தரவேண்டும் என, வாசகர் வட்டம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.