/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : டிச 27, 2024 02:05 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள், அலுவலக நடைமுறைகள், பதிவேடுகள், பதிவேடுகள் அறை, வழக்கு பதிவேடு, நிலம் தொடர்பு பதிவேடு, போன்ற பதிவேடுகள் பாரமரிப்பு பணிகள் குறித்து நேற்று, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
பின் கலெக்டர் கூறியதாவது:
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் தொடர்பான அலுவலக ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன.
கோப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்தும், மேலும், இங்கு பணிபுரிகின்ற அலுவலர்கள் பணிகள் எவ்வாறு உள்ளன. மேலும் பல்வேறு தரப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
கோப்புகள் மனுக்கள் மீது சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் பயிற்சி ஆயுஷ் குப்தா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், கலெக்டர் அலுவலக மேலாளர் புகழேந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.

