UPDATED : ஆக 06, 2026 10:09 PM
ADDED : ஆக 06, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எலல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 5ம் தேதி அவரது வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
அதன் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர், மேல்மருவத்துாரில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
காணாமல் போன மாணவியை, அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும், நேற்று வரை கிடைக்கவில்லை.
இது குறித்து, அவரது தாயார், ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
