தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்லுாரி மாணவியர் 'சஸ்பெண்ட்' விடுதி அறையை பூட்டியதால் பரபரப்பு

 கல்லுாரி மாணவியர் 'சஸ்பெண்ட்' விடுதி அறையை பூட்டியதால் பரபரப்பு

 கல்லுாரி மாணவியர் 'சஸ்பெண்ட்' விடுதி அறையை பூட்டியதால் பரபரப்பு


ADDED : மார் 28, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரியில் சமூகநீதி கல்லுாரி மாணவியர் விடுதியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி, 13 மாணவியர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வெளியேற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி தாலுகா அலுவலக சாலையில், தமிழக அரசின் சமூகநீதி கல்லுாரி விடுதியில், 40க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படிக்கின்றனர்.

கடந்த வாரம், அங்குள்ள மாணவியரில் சிலர், 'விடுதியில் வழங்கும் உணவில் புழு இருப்பதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று, விடுதியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து நேற்று, காவல் துறையினர் உதவியுடன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட மாணவியரின் உடைமைகளை வெளியே எடுத்து, அவர்கள் இருந்த அறைகள் பூட்டப்பட்டன. மேலும், மாணவியரை விடுதியில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மாணவியர் வெளியேற மறுத்து விடுதியிலேயே இருந்தனர்.

'கல்லுாரி தேர்வுகள் உள்ளதாகவும், சஸ்பெண்ட் தொடர்பான விசாரணையை எதிர்கொண்டு, எங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்' எனவும் கூறினர்.

இதையடுத்து, தற்காலிகமாக அவர்களை, பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவியர் விடுதியில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us