/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வரின் வருகை எதிரொலி பொன்னேரியில் கமிஷனர் ஆய்வு
/
முதல்வரின் வருகை எதிரொலி பொன்னேரியில் கமிஷனர் ஆய்வு
முதல்வரின் வருகை எதிரொலி பொன்னேரியில் கமிஷனர் ஆய்வு
முதல்வரின் வருகை எதிரொலி பொன்னேரியில் கமிஷனர் ஆய்வு
ADDED : ஏப் 06, 2025 02:25 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தில், வரும் 19ம் தேதி, ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அன்றைய தினம், பொன்னேரி நகர பகுதியில் 'ரோட்ஷோ'வில் பங்கேற்கும் முதல்வர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதே நாளில் பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடைபெறுகிறது
முதல்வரின் 'ரோட்ஷோ' நிகழ்ச்சியும், தேர் திருவிழாவும், பொன்னேரி நகரப்பகுதியில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று, ஆவடி கமிஷனர் சங்கர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் பெருஞ்சேரி கிராமம், ரோட்ஷோ நடைபெற உள்ள பொன்னேரி நகரத்தின் முக்கிய சாலைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அதன்பின், பொன்னேரி தேரடி பகுதியில் தேர் புறப்படும் நேரம், செல்லும் வழித்தடம், பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து வருவாய், காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அது தொடர்பான விபரங்களை, வரைபடங்களுடன் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தேர் திருவிழா நடைபெறும் நாளில், முதல்வரின் வருகையை திட்டமிட்டிருப்பது, பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

