ADDED : மார் 07, 2026 05:59 AM

மப்பேடு: மப்பேடில் 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாய கூடம், பயன்பாட்டிற்கு வராமல் மதுக்கூடமாக மாறி வருவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மப்பேடு கால்நடை மருத்துவமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ம் ஆண்டு பணி துவங்கியது.
ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த கட்டுமான பணி, 2025 ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
பணி நிறைவடைந்து ஓராண்டாகியும், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனால், தற்போது 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றிவிட்டனர். இது, மப்பேடு பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மப்பேடு ஊராட்சியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
